இந்திய ஜனநாயக கட்சி சார்பில் வாகன ஓட்டுநர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு உணவு பொருட்கள் அளிப்பு!!
கொரனோ ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கொரனோ ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், வாடகை கார் ஓட்டுநர்கள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு அரிசிப்பை, காய்கறிகள் அடங்கிய தொகுப்புப்பை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்டத் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் போத்திராஜ், மாவட்டப் பொருளாளர் வெங்கடசுப்பிரமணியன், மாவட்ட அமைப்புச் செயலர் கோபாலகிருஷ்ணன், நகரச் செயலர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.