தூத்துக்குடி மாவட்டம் இனாம் மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் சீனிவாசநகர் நியாய விலை கடையில் 19 வகையான மளிகைப் பொருட்கள் உள்ளடங்கிய ரூ.500 மதிப்பிலான சலுகை விலை மளிகை தொகுப்பு பைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜீ அவர்கள் பேசியதாவது : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுய ஊரடங்கு உத்தரவு பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு கூட்டுறவு சங்கங்களில் செயல்படும் நியாய விலை கடையில் 19 வகையான மளிகைப் பொருட்கள் உள்ளடங்கிய ரூ 500 மதிப்பிலான மளிகை தொகுப்பு பைகளை வழங்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 25,000 மளிகை தொகுப்பு பைகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் நமது மாவட்டத்தில் உள்ள 150 கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் 854 நியாய விலை கடைகளிலும் ரூ.500 மதிப்பிலான மளிகை தொகுப்புகள் வழங்கப்படுகிறது. இந்த மளிகை தொகுப்பு பையில் துவரம் பருப்பு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு டீ தூள் உப்பு பூண்டு உள்பட்ட 19 வகையான மளிகைப் பொருட்கள் உள்ளது. இதன் மதிப்பு வெளிச்சந்தையில் ரூபாய் 600 ஆகும். இது ரூபாய் 500 என்ற சலுகை விலையில் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு பல்வேறு இடங்களுக்கு செல்வது தவிர்க்கப்படுகிறது. பொதுமக்கள் இருப்பிட அருகில் உள்ள நியாயவிலை கடையில் மளிகை தொகுப்பு பயணிகள் எளிதாக கிடைக்கிறது. ஆகவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பொருட்களை அறிவியலை வாங்கி பயன்பெற வேண்டும் என பேசினாஅதனைத் தொடர்ந்து மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் சைல்டு லைன் 1098 மூலம் உதவி பெற்ற குழந்தைகளுக்கு 10 கிலோ அரிசி மஞ்சள் தூள் எண்ணெய் உப்பு மல்லித்தூள் உள்ளிட்ட 14 வகையான மளிகை பொருட்களை மாவட்டத்தில் உள்ள 65 குழந்தைகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி. சத்யா, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் திரு. மோகன், கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர், கோவில்பட்டி கோட்டாட்சியர் திருமதி. விஜயா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. ரவிச்சந்திரன், துணைப்பதிவாளர் கோவில்பட்டி திரு. ஜெயசீலன், சார் பதிவாளர் திரு. ஜெயம்மணி, திரு.முருகவேல், திரு.குமாரசாமி, திருமதி.செண்பகவள்ளி, மணியாச்சி கூட்டுறவு கடன் சங்க தலைவர் திரு.மகேஷ் குமார், செயலாளர் திரு.வேல்ராஜ், வட்டாட்சியர்கள் திரு.மணிகண்டன் (கோவில்பட்டி), திரு. பாஸ்கரன் (கயத்தார்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. மாணிக்கவாசகம் கயத்தார்), திருமதி. வசந்தா (கோவில்பட்டி), கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் திரு.ராமச்சந்திரன், முக்கிய பிரமுகர் திரு. அய்யாத்துரைப்பாண்டியன், திரு. விஜய பாண்டியன், திரு.சுப்புராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.