குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அளிப்பு : சாத்தான்குளம் வட்டம்

சாத்தான்குளம் வட்டத்தில் குடும்ப அட்டை இல்லாத நபா்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை, எளியமக்கள், முதியோர்களை வருவாய்த்துறையினா் கண்டறிந்து அவா்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகின்றனா். அதன்படி சாத்தான்குளம் வட்டத்தில் 98 பேர்கள் கண்டறியபட்டு அவா்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை சாத்தான்குளம் வட்டாட்சியா் ம.ராஜலட்சுமி நேற்று (20.4.20) வழங்கினாா். அருகில், சிறப்பு வட்டாட்சியா் ரதிகலா, கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.