ஆதரவற்ற குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல் : தூத்துக்குடி மாவட்ட பாரத சாரணர், சாரணியர் இயக்கம்

தூத்துக்குடி மாவட்ட சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் வைத்து ஆதரவற்ற குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

“கோவிட் 19” வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் தினக்கூலி மூலம் வருமானம் பெற்ற ஆதரவற்ற 110 குடும்பங்களை தேர்ந்தெடுத்து முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை ஆணையர் யு.ஞானகௌரி வழிகாட்டுதலின்படி அரசின் சட்டத்திற்கு உட்பட்டு சமூக இடைவெளியைக் கடைபிடித்து சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் வைத்து வீட்டு சமையல் பொருட்கள், அரிசி, மளிகைப் பொருட்கள், சமையல் எண்ணெய், காய்கறிகள், தேங்காய் ஆகிய பொருட்கள் அடங்கிய பை அனைவருக்கும் வழங்கப்பட்டது. இத்துடன் கையுறையும், முகக்கவசமும், விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சாரண, சாரணிய இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் எட்வர்ட் ஜாண்சன் பால், மாவட்ட ஆணையர் சண்முகம், மாவட்ட அமைப்பு ஆணையர் அல்பர்ட் தினேஷ் சாமுவேல், மாவட்ட பயிற்சி ஆணையர்கள் ஜெயாசண்முகம், சரவணன், இணைச் செயலாளர் ஜான் சௌந்திரராஜ், சாரண, சாரணிய இயக்கத்தின் பொறுப்பாசிரியர்கள் பிரித்விராஜ், ராஜ்பரத், பாரதகலா, பிரான்சிஸ் ஆகியோர் செய்திருந்தனர்.