சாஸ்தாவின் நல்லூர் குடிநீர் அபிவிருத்தி மையம் மற்றும் விவசாய நலச்சங்கம் சார்பில் அத்திவாசிய பொருட்கள் வழங்கல்

சாஸ்தாவின் நல்லூர் குடிநீர் அபிவிருத்தி மையம் மற்றும் விவசாய நலச்சங்கம் சார்பாக 20 குடும்பத்தினருக்கு மளிகை பொருட்கள் வழங்கல்

சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவின் நல்லூர் குடிநீர் அபிவிருத்தி மையம் மற்றும் விவசாய நலச்சங்கம் சார்பாக சாஸ்தாவின் நல்லூர் கிராமத்திலுள்ள சந்திராயர் புரத்தில் உள்ள 20 குடும்பத்தினருக்கு ஒரு நபருக்கு ரூ 1150 மதிப்புள்ள பொருள்களாக காய்கறி மளிகை சாமான் தின்பண்டங்கள் அரிசி, கவரில் ஒரு நபருக்கு ரூ 200 வைத்து கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சாஸ்தாவின் நல்லூர் விவசாய நலச்சங்க தலைவர் எட்வின் காமராஜ், சாஸ்தாவின் நல்லூர் விவசாய நலச்சங்க செயலாளர் லூர்து மணி தலைமை வகித்தனர். ஸ்ரீவைகுண்டம் இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தொகுதி தலைவர் வர்க்கீஸ், சாஸ்தாவின் நல்லூர் பஞ்சாயத்து தலைவி திருக்கல்யாணி, படுக்கப்பத்து விவசாய சங்க தலைவர்சரவணன், விவசாய சங்கத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், விவசாய சங்க துணைச் செயலாளர் ஜஸ்டின் ஜெயராஜ் ஆகி.யோர் முன்னிலை வகித்தனர்.

நிவாரண பொருள்களை சமூக நல பாதுகாப்பு தனித் தாசில்தார்.செந்தூர் ராஜன், சாஸ்தாவின் நல்லூர் விவசாய சங்கத் தலைவர் எட்வின் காமராஜ் ஆகியோர் வழங்கினர். இதில் . அருள்ராஜ். சந்தன திரவியம். மரிய செல்வ ஜெகன். மைக்கேல் எப்ரேம். இராஜமனோகரன். ஜெயக்குமார். சித்திரை. செல்வன். வெலிங்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.