350 நபர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல் – தருவைக்குளம்

கடந்த 2 மாதங்களாக இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கபட்டு மக்கள் அனைவரும் வீட்டிலே முடங்கி உள்ளனர், ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் தங்கள் தொழில்கள் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் இன்று (14.05.2020) மூன்றாவது முறையாக, ஏழாவது நாளாக தருவைக்குளம் பங்குத்தந்தை எட்வர்ட் ஜே , துணை பங்குத்தந்தை திலகராஜா அவர்களது தலைமையில் ஊராட்சி மன்றத் தலைவி கா.காடோடி, துணைத் தலைவர் அ.அ.ஜெயபால் அவர்கள் முன்னிலையில் 350 நபர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், ஊர் கணக்கர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சமூக இடைவெளிவிட்டு, முகக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

நிவாரண பொருட்கள் வழங்கிய கோஸ்டல் எனர்ஜென் பவர்பிளாண்ட் நிர்வாகத்தினருக்கும், முதன்மை மேலாளர் பீர் முகம்மது (மனிதவளம் மற்றும் நிர்வாகம்) மற்றும் அலுவலக நிர்வாகி சண்முகராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

இதுவரை சாதி, மத, இனம் வேறுபாடின்றி 2000 குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கியிருப்பதாக பங்குத்தந்தை எட்வர்ட் ஜே அவர்கள் தெரிவித்தார்.