சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 210 ஏழை மாணவர் குடும்பங்களுக்கு 70ஆயிரம் மதிப்பில் கரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்

சாத்தான்குளம், விஜயராமபுரம் பள்ளியில் மாணவர்கள் குடும்பத்துக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 210 ஏழை மாணவர்கள் குடும்பங்களுக்கு 70ஆயிரம் மதிப்பில் கரோனா நிவாரண பொருள்கள் 70 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்பட்டது.

நிவாரண பொருள்களை பள்ளித்தாளாளரும், வட்டார முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் தலைமையில் சாத்தான்குளம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செந்தூர்ராஜன் ,தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சுவாமிநாதன் ,சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் ,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ் ,ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இதில் பள்ளி தலைமையாசிரியர் ஹென்றி, மற்றும் ஆசிரியர்கள் , அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் பள்ளி செயலர் மற்றும் நிர்வாக கமிட்டி மற்றும் சென்னை வாழ் விஜயராமபுரம் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் குடும்பம் 350பேர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீசபாண்டி நிவாரண பொருகள் வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.