சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 168வது படத்திற்கு பூஜை

தர்பாருக்கு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 168வது படத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி போன்றோர் நடிக்கிறார்கள். இந்நிலையில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வின் போது எடுத்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளது.