சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் : பழையகாயல்

ஏரல் அருகே உள்ள பழையகாயல் பஞ்சாயத்து பகுதியில் தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது. முகாமினை பஞ்சாயத்து தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முகாமில் ஊராட்சி செயலாளர் வசந்தா வரவேற்றார். நிகழ்ச்சியில் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டு ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளித்தனர்.