பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் – சுமங்கலி மகளிர் குழு, மாப்பிள்ளையூரணி

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட ஜெ. ஜெ நகரில் வசிக்கும் அன்னலட்சுமி அவர்கள் மற்றும் 12 பேர் கொண்ட சுமங்கலிகள் மகளிர் குழுக்கள் மாவட்ட ஆட்சியர் உத்திரவின்படி கொரானா தடுப்பு மருந்துகள் (கிருமிநாசினி, லைசர், சோப்பு) ஆகியவற்றை தயாரித்து விநியோகித்து வருகிறார்கள்.

தற்போது மாவட்ட ஆட்சி தலைவர் திரு.சந்தீப் நந்தூரி அவர்களின் உத்தரவு படி மருத்துவ துறையில் பணிசெய்பவர்களுக்கு கொரானா வைரஸ் பரவுதல் தடுக்கும் விதமாக பாதுகாப்பு உடைகள், முகமூடி (மாஸ்க்), கையுறை (கிளவ்ஸ்) போன்றவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.