கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தூத்துக்குடி மாப்பிளையூரணி பஞ்சாயத்து சுமங்கலி மகளிர் குழு சார்பில் கொரானா தடுப்பு மருந்துகள் (கிருமிநாசினி, லைசர், சோப்பு) ஆகியவற்றை தயாரித்து விநியோகித்தனர். அதன்பின் மாவட்ட ஆட்சி தலைவர் திரு. சந்தீப் நந்தூரி அவர்களின் உத்திரவு படி மருத்துவ துறையில் பணிசெய்பவர்களுக்கு கொரானா வைரஸ் பரவுதல் தடுக்கும் விதமாக பாதுகாப்பு உடைகள் மாஸ்க், கிளவ்ஸ் ஆகியவற்றை தயாரித்து விநியோகித்தனர். தற்போது கொரானாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கு ஜிப் பேக் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் தூத்துக்குடி எஸ்.பி அலுவலகம் மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொரானா பணியில் ஈடுபடும் காவல்துறையினர்களுக்கு முக கவசம் தயாரிப்பதற்கு அனுமதி வாங்கி, அவர்களுக்கு முக கவசம் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த வாய்ப்பினை அளித்த P.O அவர்களுக்கும், மகளிர் திட்டத்திற்கும் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி சுமங்கலி மகளிர் குழு தலைவி அன்னலட்சுமி அவர்கள் அவர்களது நன்றியினை தெரிவித்தார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது: தூத்துக்குடி மாவட்டம் கொரானா பாதிப்பால் சிவப்பு மண்டலத்திலிருந்து தற்போது ஆரஞ்சு மண்டலத்திற்கு வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தகுந்த கட்டுப்பாடுகளை விதித்த அரசின் செயல் திட்டங்களை, மாவட்டத்தில் அதன்படி செயல்பட உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அவரது நன்றியினை தெரிவித்தார். கொரானா தொற்று பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் கொடுத்து, பல கட்டுப்பாடுகளை விதித்து அதன்படி மக்கள் செயல்படுகிறார்களா? என்பதையும் தீவிரமாக கண்காணித்தும் வந்துள்ளார். மேலும் இந்த காலகட்டத்தில் எங்களது வாழ்வாதாரம் பாதிக்காதவாறு 23 பேர் கொண்ட எங்களது குழுவிற்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார். அவரது இந்த செயலினை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுமங்கலி மகளிர் குழுவில் உள்ள அனைவரும் பாராட்டுகின்றனர்.