அனுமதியின்றி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணையில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை கண்டித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆறாம்பண்ணை பள்ளிவாசல் செயலாளர் மொன்னா முகமது தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. ஜமாத்துல் உலமா சபை முன்னாள் மாநில தலைவர் சலாஹித்தின், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் உஸ்மான், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியதாக முக்கிய நிர்வாகிகள் 11 பேர் உள்பட 900 பேர் மீது முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.