ஆவடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி – சென்னை

சென்னை புறநகர் பகுதியாண ஆவடி அண்ணனூரில் வசித்து வரும் கோவிந்தசாமி-சுப்பம்மாள் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் நேற்று மாலை விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்று உள்ளனர். இதில், கோவிந்தசாமி (64), சுப்பம்மாள் (60), நாகராஜ் (35), ரவி (30) ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தனர். மற்றும் கல்யாணி (28) சர்வேஸ்வரி (8) யோகப்பிரியா (6) ஆகிய 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.