கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை ஸ்ரீராம் நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவர் சாஸ்த்ரி நகரில் பகுதி இயந்திர தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். இவரது ஆலையில் கழிவுக் குச்சி தேங்கியிருந்த பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதையடுத்து, அங்கிருந்த தொழிலாளர்கள் தீயணைக்கும் கருவி மூலம் தீயை அணைத்தனர்.இருப்பினும் தகவல் தெரிந்தவுடன் தீயணைப்புப் படையினர் அங்கு சென்றனர். அதற்குள் ஆலை ஊழியர்களே தீயை அணைத்துவிட்டனர். சம்பவ இடத்தை வட்டாட்சியர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் மந்திரசூடாமணி ஆகியோர் பார்வையிட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து வட்டாட்சியர் கேட்டறிந்தார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.