ஊரடங்கால் பாதித்த ஒலிபெருக்கி மற்றும் பந்தல் தொழில்கள்

தற்போது கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் விதமாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு தொழில் செய்து வந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பசிக்கும், இதர செலவுகளுக்கும் அரசாங்கம் மற்றும் சமூக ஆர்வலர்களை நாடி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில்களில் ஒலிபெருக்கி மற்றும் பந்தல் தொழில்களும் ஆகும்.

அனைத்து வழிபாட்டு தலங்களில் நடைபெறும் விழாக்கள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் திருமண விழா, புதுமனை விழா போன்ற அனைத்து விழாக்களிலும் முதன்மை வகிப்பது ஒலிப்பெருக்கியே. மேலும் விழாக்காலங்களில் தோரணை, அலங்காரம், பந்தல் மற்றும் பல கலர் கலர் வண்ண விளக்குகாளால் அலங்காரம் செய்து அனைவரையும் வெகுவாக கவர்கிறது. அனைத்து ஊர்களிலும் ஒலிபெருக்கிகள், வண்ண அலங்கார விளக்குகள், பந்தல் மேடை அமைக்கும் தொழில், என ஏராளமானவர்கள் கொண்ட தொழில் ஆகும். இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்கள் உள்ளன. தென்மாவட்டங்களில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் திருவிழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தற்போது நிலையில் ஊரடங்கு தடையால் அனைத்து நிகழ்வுகளும் முடக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டு மீண்டும் விழாக்களில் வைக்கப்படும் ஒலிபெருக்கியின் பாடல்களை கேட்போமா? கண்கவரும் வண்ண அலங்கார மின்விளக்குகள் ஜொலிக்குமா?..