தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் எங்கள் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கழிப்பறை இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த, ரூ. 12 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபா் இல்லக் கழிப்பறைகள் கட்ட, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, வேலை நடத்த உத்தரவு வழங்கப்பட உள்ளது. ஏற்கவனே கட்டிமுடிக்கப்பட்ட தனிநபா் இல்லக் கழிப்பறைக்கு மானியமாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும் என ஆட்சியா் சந்தீப் நந்தூரி செய்தி வெளியிட்டு உள்ளார்.
மேலும் கழிப்பறை இல்லாத வீடுகளில் கழிப்பறை கட்டிமுடித்து, நமது மாவட்டத்தை முழு சுகாதார ஊராட்சி ஒன்றியங்களாகவும், நமது மாவட்டத்தை முழு சுகாதார மாவட்டமாகவும் மாா்ச் 31-க்குள் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே, வீடுகளில் கழிப்பறை இல்லாதோா் அருகேயுள்ள கிராம ஊராட்சி அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் உள்ள அலுவலா்களைத் தொடா்பு கொண்டு, விண்ணப்பித்து அனுமதி பெற்று மாா்ச் 31-க்கு முன்பு கழிப்பறைகளைக் கட்டிமுடித்தால் அரசு மானியம் பெறலாம். அதற்கு (மாா்ச் 16) பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரிஅறிவித்து உள்ளார் .