திருச்செந்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகள், அரிசி,பருப்பு, ஆகியவற்றை விளம்பரத்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் விவசாய உதவிதொகை திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 3504 பேர்களுக்கு ரூ.3.86 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக விவசாய பணிகளுக்கு விலக்கு அளித்து பணிகள் தொடர விவசாய உதவி தொகை வழங்கும் திட்டத்தில் 3504 பேர்களுக்கு ரூ.3.86 கோடியை வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் வெங்காயம் பயிரிட்டுள்ள 1600 பேர்களுக்கும், மக்காசோளம் பயிரிட்டுள்ள 1904 பேர்கள் விவசாய உதவி தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
