நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் உதித் சூர்யா கைது!

நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக  தேடப்பட்டு வந்த மாணவர் உதித் சூர்யா குடும்பத்துடன் திருப்பதியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்களை சிபிசிஐடி போலீசார்  சென்னைக்கு அழைத்து வந்தனர். ஒரு ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் நடத்தப்பட்ட  விசாரணையில் உதித் சூர்யாவின் த‌ந்தைக்கு ஆள்மாறாட்டத்தில் முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது.
தற்போது உதித்சூர்யா குடும்பத்தினர் தேனிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு நடைபெறும் விசாரணைக்கு பின் இந்த ஆள்மாறாட்டத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா போன்ற தகவல்கள் தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர் உதித் சூர்யா