மாணவர்கள் இபாஸ் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 12 தனிமைப்படுத்தும் பகுதிகள் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் சென்று வர இபாஸ் மூலம் விண்ணப்பிக்கலாம். தனிமைப்படுத்தும் பகுதிளிலுள்ள மாணவர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு பேருந்து வசதி செய்யப்படும். காய்ச்சலை தானாகவே கண்டறியும் கருவி ஆட்சியர் அலுவலகத்திலும், கோவில்பட்டி சோதனை சாவடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. சோதனை செய்யும் போது காய்ச்சல் கண்டறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.