வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியதை கண்டித்து போராட்டம்

மத்தியஅரசு தொழிலாளர்கள் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியதை கண்டித்து இன்றைய தினம் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் CITU சார்பாக பொன்ராஜ் மாவட்ட உதவித் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் குமாரவேல் (தலைவர் பொது தொழிலாளர் சங்கம்) பெருமாள் செயலாளர் (பொது தொழிலாளர் சங்கம்) மணவாளன் துணைச்செயலாளர் சங்கரன் செயலாளர் (உப்பு தொழிலாளர் சங்கம்) ராஜா மாநகரச் செயலாளர் (சி பி எம்) எம் எஸ் முத்து மாவட்ட செயலாளர் (DYFI) வரதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.