தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராஜபாளையம் பகுதி அருகே தேவேந்திர குல வேளாளர் பசுபதி பாண்டியன் அவர்களின் நினைவிடத்தில் கடந்த மாதம் மணிமண்டபம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அதனை கண்டித்து பசுபதி பாண்டியன் ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய இருந்த நிலையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.