வடமாநிலங்களில் பலத்த நிலநடுக்கம்

டெல்லி மற்றும் ஸ்ரீநகர், மதுரா, சண்டிகர் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலை பகுதியில், பூமியின் மேற்பரப்பில் இருந்து 190 கிலோமீட்டர் ஆழத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3-ஆக பதிவானது. இந்த நில அதிர்வு பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின.