வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண்  புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்க கடலில் இன்று இரவு புயல் உருவாக உள்ள நிலையில் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூடு ஏற்றப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு கடற்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக காற்று  மணிக்கு 60 முதல் 65 கி.மீ., வேகத்தில் வீசக் கூடும்.  நாளை (மே 17) , நாளை மறுநாள் (மே 18) காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் என்பதால் நாட்டுப்படகு, பைபர் படகுகளில் தொழிலுக்குச் செல்லும்  மீனவர்கள் கரை ஓரங்களில் மீன்பிடிக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தகவல் தொடர்பு கொள்ளும் தூரத்தில் மீன் பிடிக்க வேண்டும், புயல் குறித்து எச்சரிக்கை எதுவும் ஏற்பட்டால் உடனே கரைக்கு வந்துவிடவேண்டும்  என மீனவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண்  புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.