வைப்பாற்றில் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் : இளைஞர்கள் தலையில் முக்காடு போட்டு போராட்டம்

வைப்பாற்றில் மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைப்பாறு பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் வீரசுதாகர் தலைமையில் இளைஞர்கள் தலையில் முக்காடு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:
எட்டயபுரம் தாலுகா அயன்ராசாபட்டி, கைலாசபுரம் ஆகிய கிராமங்களில் சவுடு மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்றதாக கூறி, சிலர் அங்குள்ள வைப்பாற்றில் இருந்து மணலை கடத்தி செல்கின்றனர். இதற்கு சில அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்.
எனவே வைப்பாற்றில் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.

கோட்டாட்சியர் விஜயா மனுவை பெற்று கொண்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.