இலங்கையில் உள்ள இந்தியர்களை கப்பலில் அழைத்து வர நடவடிக்கை!!!

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இலங்கையில் உள்ள இந்தியர்களை அழைத்து வர இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல், ஜூன் 1 ஆம் தேதி இலங்கை, கொழும்புவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு புறப்படவுள்ளது. அந்த கப்பலில் பயணித்து வரவுள்ள அனைத்து பயணிகளுக்கு தூத்துக்குடி துறைமுக சுகாதார துறையினரோடு இணைந்து, மாவட்ட சுகாதார துறையினர் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வர். பரிசோதனை முடிவு வெளிவரும்வரை அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.