DYFI சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம்: தூத்துக்குடி

தூத்துக்குடி மாசிலாமணிபுரம் 3வது தெருவில் காலை 10.30 மணிக்கு DYFI மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. அதில் DYFI சார்பில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் இருந்தன அவற்றில் 1.பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் வாங்கு. 2. மின் திருத்த சட்டத்தை திரும்ப பெறு, விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதே, கொரோனா காலம் முடியும் வரை மின் கட்டணத்தை ரத்து செய். 3.இஎம்ஐ உள்ளிட்ட நுண் நிதி கடன்களை முழுவதும் ரத்து செய்திடு. 4.சாத்தான்குளம் படுகொலைக்கு நீதி வேண்டும், ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸை தடை செய். போன்ற கண்டன கோஷங்கள் எழுப்பினர்.