தேவாலயத்தைத் திறக்க மாநில அரசின் வழிமுறைகள்

ஜூலை 1 முதல் கிராமங்களில்(சில மாவட்டங்கள் தவிர்த்து) தேவாலயத்தைத் திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது .மாநில அரசு கூறப்பட்டுள்ள வழிமுறைகள்:

 1. நிலைமைக்கு ஏற்றவாறு தேவாலயத்தை பங்கு தந்தை திறக்கலாம்.
 2. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
  3.உடல் நலம் இல்லாதவர்கள் கோயிலுக்கு வரக்கூடாது.
 3. கோயிலின் வெளியே சுத்தம் செய்ய வசதி செய்ய வேண்டும்.
 4. இரண்டு திருப்பலி இருந்தால் முதல் திருப்பலி முடிந்ததும் கோயிலை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
 5. ஒரு வாயில் வழியாக உள்ளேயும் மற்றொரு வாயில் வழியாக வெளியேயும் செல்ல வேண்டும்.
 6. சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.
 7. கோயில் வளாகத்தில் கூட்டத்தை தவிர்க்க வேண்டும்.
 8. புனித சடங்குகள் முடிந்ததும் கோயிலை விட்டு உடனே வெளியேற வேண்டும்.
 9. அரசிடமிருந்து மறு அறிவிப்பு வரும் வரை திருவிழாக்கள் நடத்தக்கூடாது.
 10. முகக்கவசம் அணிந்து நற்கருணையை கைகளில் வழங்க வேண்டும்.
 11. நிலைமை சீரடையும் வரை குருவானரிடம் தனிநபர் ஆசீர்வாதம் நிறுத்தப்பட்டுள்ளது.
 12. ஜீலை முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு அடைப்பு இருப்பதால் ஞாயிறு திருப்பலியை சனிக்கிழமை மாலை நிறைவேற்றலாம்.