5-ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு- தமிழக அரசு உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீட்டிப்பு

நீலகிரி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை

மெட்ரோ ரயில், மின்சார ரயில்களுக்கான தடை நீட்டிக்கப்படுகிறது

மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு

ஜூன் 30 வரை பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை தொடர்கிறது

கல்வி நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றலை தொடரலாம்; அதனை ஊக்கப்படுத்தலாம்

தியேட்டர், உடற்பயிற்சி கூடங்கள், மதுபான விடுதிகளுக்கு தடை நீட்டிப்பு

ஜூன் 1 முதல் பொதுப் போக்குவரத்து 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அனுமதி

1ஆம் மண்டலம்: கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல்

2ஆம் மண்டலம்: தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி

3ஆம் மண்டலம்: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி

4ஆம் மண்டலம்: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை

5ஆம் மண்டலம்: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்

6ஆம் மண்டலம்: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி

7ஆம் மண்டலம்: காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு

8ஆம் மண்டலம்: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள்

சென்னை தவிர்த்து இதர மண்டலங்களில் 50% பேருந்துகள் இயக்கப்படும்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தடை நீட்டிப்பு

அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதி

பேருந்துகளில் 60% இருக்கைகளில் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி

பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க இ பாஸ் அவசியமில்லை

மண்டலங்கள், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தடை தொடர்கிறது

வெளிமாநிலங்கள், வெளி மண்டலங்களுக்கு சென்று வர இ பாஸ் முறை தொடர்ந்து நடைமுறை

வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து பெரிய நகை, ஜவுளி கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்

டீக்கடைகள், உணவு விடுதிகளில் ஜூன் 7 வரை பார்சல் மட்டும் அனுமதி

காய்கறிக் கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி

டேக்சி வாகனங்கள் ஓட்டுனர் தவிர்த்து 3 பயணிகளுடன் மண்டலத்திற்குள் இ பாஸ் இன்றி பயன்படுத்தலாம்

ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து 2 பயணிகளுக்கு அனுமதி

முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் ஏசி வசதியின்றி நெறிமுறையைப் பின்பற்றி இயங்க அனுமதி

அனைத்து தனியார் நிறுவனங்களும் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

இயன்றவரை பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்

144 தடை உத்தரவின்படி 5 நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடரும்

திருமண நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்களுக்கு ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்

திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது; இறுதி நிகழ்ச்சிகளில் 20 பேர் பங்கேற்கலாம்

தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி முழுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்படும்

தமிழக அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கினால் தான் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும் – முதலமைச்சர்

அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளருக்கு ரூ.2500 வழங்கப்படும்