தேர்வை எளிதாக சந்திக்க ஆன்லைனில் வகுப்புகள் : மதர் தெரசா பொறியியல் கல்லூரி

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவ, மாணவியர் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வாகைகுளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் மாணவ மாணவியரின் தடையில்லா கல்வியை ஊக்குவிக்கும் வகையில், கல்லூரி பேராசிரியர்கள் ஆன்லைன் செயலி மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

ஸ்காட் நிறுவனங்களின் தலைவர் கிளிட்டஸ் பாபு அறிவுரைப்படி கல்லூரியின் இந்த முயற்சியை மாணவ, மாணவியரின் பெற்றோர் பாராட்டினர் .மேலும் விழித்திரு, விலகியிரு, வீட்டிலே இரு என்ற கோட்பாட்டிற்க்கு ஏற்ப சிறந்த வழிகாட்டுதலுடன் தடையில்லா  கல்வி கிடைப்பதால் – தேர்வை எளிதாக சந்திக்க முடியுமென மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். இந்த ஆன்லைன் கற்பித்தல் முறை, ஸ்காட் பொறியியல் கல்லூரி மற்றும் எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியிலும் நடை பெறுகிறது .