தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 72th ஆண்டு விழா

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 72th ஆண்டு விழா இன்று (14.03.20) கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பாளையங்கோட்டை, St. சேவியர் கல்லூரி முதல்வர் சகோ Dr.S.மரியதாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவினை முதல்வர் முனைவர் அருட்சகோதரி லூசியா ரோஸ், சுயநிதி பிரிவு இயக்குனர் அருட் சகோதரி மேரி ஜாய்ஸ் பேபி மரியன்னை இல்லத்தலைவி அருட்சகோதரி முனைவர் மரியசாந்தி மற்றும் தேர்வாணையர் முனைவர் ஆரோக்கிய மேரி முன்னிலை வகித்தனர். கல்வி முதல்வர் நடப்பு ஆண்டிற்கான அறிக்கையை வழங்கினார். பணி ஓய்வு பெறும் பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் பல்வேறு விருதுகள் பெற்ற பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டார். மேலும் மாணவர்கள் பேரவை சார்ந்த மாணவிகள் பல்வேறு அமைப்புகள் மற்றும் பாடங்களில் முதல் மற்றும் இரண்டாம் இரண்டாம் இடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.