கோடி அற்புதர் புனித அந்தோணியார் கெபி திருவிழா கொடியேற்றம் – தூத்துக்குடி

தூத்துக்குடி பூபாலராயர்புரத்தில் உள்ள புனித சூசையப்பர் ஆலய பங்கு கோடி அற்புதர் புனித அந்தோணியார் கெபி 39 ஆம் ஆண்டு திருவிழா, புனித சூசையப்பர் ஆலய உதவி பங்குத்தந்தை ஜேசுராஜ் தலைமையில் நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. வருகிற 25-ஆம் தேதி காலை 11.30 மணியளவில் அசன விருந்து நடக்கிறது. மற்றும் இரவு 7.30 மணிக்கு திருவிழா கூட்டு திருப்பலி, இரவு 8 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெறும். பின்பு இரவு 9 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். திருவிழாவால் அந்த பகுதி மக்கள் ஆரவாரத்துடன் உள்ளன.