தேசியக் கொடியின் சிறப்பு!!

நமது தேசியக் கொடி மூவர்ணக்கொடி ஆகும். அதன் ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு பொருளை விளக்குகிறது.

காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தை குறிக்கிறது. வெள்ளை நிறம் உண்மை மற்றும் தூய்மையை குறிக்கிறது. பச்சைநிறம் நம் நாட்டின் வளத்தையும் செழிப்பையும் குறிக்கிறது
தேசியக்கொடியின்நடுவில் தோன்றும் சக்கரம் அவ்வையாரின் அமுதவாக்கிய ‘சக்கர நெறி நில்’ என்ற உண்மையை உணர்த்துகிறது.

அசோக மன்னரால் இன்னாசெய்யாமையே தனது ஆட்சியின் சின்னம் என்ற புத்தரின் மெய்யுரையை உலகுக்கு எடுத்துக் கூறி நீதி வழுவாது நின்று முறை செய்த அம்மன்னராட்சி இன்று நமது நாட்டில் நடைபெறுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறதுஎன்ன சக்கரம் 24 ஆரங்களை உடையது ஆரமும் ஒவ்வொரு கருத்தை கூறுகிறது.
1.தீங்கு செய்யாதே
2.செயலால் உண்மை
3.இரக்கம் உடைமை
4.வறியோர்க்கு வழங்குதல்
5.உடல் தூய்மை
6.அருளுடைமை
7.சொல்லில் நல்லவனாக இருத்தல்.
8.சிக்கனம்
9.புலனடக்கம்
10.எண்ண தூய்மை
11.செய்நன்றி அறிதல்
12.மாறாத அன்பு உள்ளம்
13.இரண சேவை
14.பயப்பக்தியுடைமை
15.அறம் செய்வதில் ஆர்வம்
16.பாவம் செய்வது அச்சம்
17.தன்னம்பிக்கை
18.உற்சாக உடைமை
19.சமய பொறை
20.கடின உழைப்பு
21.அறத்தின் வழி பெரும் வெற்றி நிலையானது
22.பொதுமக்களுக்கு நன்மை செய்தல்
23.மானம் உடைமை
24.அனைவரிடத்திலும் தர்மத்தை பரப்புதல்
இந்த 24 அறங்களையும் நம் வாழ்வில் கடைப்பிடித்து நேர்மையாக வாழவேண்டும்.

தர்ம சக்கரத்தின் மறுபெயர் போதி சத்வ தர்மங்கள்.
நம் நாட்டின் கொடியை நம் மக்களின் உரிமைக்கும், பெருமைக்கும், வாழ்விற்கும், வளர்ச்சிக்கும்ஒற்றுமைக்கும் உயர்வுக்கும் உரிய சின்னமாகும்.

ஒவ்வொரு இந்திய குடிமகனும் தன் சிரம் அற்றுத் தரையில் வீழினும் தன் இன்னுயிரென்ன நம் நாட்டின் கொடியை காப்பாற்றுதல் நம் தலையாய கடமையாகும்.