மாநகராட்சி சார்பில் நடைபெற்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசு

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாநகராட்சி சார்பில் ஆன்லைன் மூலம் ஜூன் ஒன்று முதல் பத்தாம் தேதி வரை ஆசிரியர்கள் பலதுறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் ஆகியோரைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இருநூற்றுக்கும் அதிகமான மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் மேற்படி பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்களும் சிறப்பான ஐந்து இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு கூடுதலாக ரூபாய் 1000 ஊக்கத்தொகையாக மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் முனைவர் வி ப ஜெயசீலன் இ.ஆ.ப. அவர்களால் வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாநகராட்சி பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.