கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுவோரின் வசதிக்காக 5 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளா்கள், துப்புரவு பணியாளா்கள், காவலா்கள் வசதிக்காக தூத்துக்குடி புகா் பேருந்து பணிமனையில் இருந்து தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, கோவில்பட்டி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் என 5 முறை சிறப்பு பேருந்துகள்  தூத்துக்குடியில் இருந்து காலை 8 மணிக்கு திருநெல்வேலி செல்லும் பேருந்து புதுக்கோட்டை, வாகைகுளம், தெய்வசெயல்புரம், வல்லநாடு உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளா்கள், செவிலியா்கள், மருத்துவா்கள், காவல்துறையினரை இறக்கி விட்டு விட்டு மீண்டும் மாலையில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரும் போது அத்தியாவசிய பணியாளா்களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. அனைத்து பணியாளா்களும் விடுமுறையில் இருக்கும் காரணத்தினால் பொது சேவையாக இதில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளோம் என பேருந்தில் பணிபுரியும் ஓட்டுநா்களும், நடத்துநா்களும் தெரிவித்தனா்.