பணியில் இருக்கும் போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர்

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு. ராமச்சந்திரன்(வயது 50) என்பவர் இன்று காலை (31.05.2020) பணியில் இருக்கும் போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அவருக்கு சாரதா(42) என்ற மனைவியும் ஷினி(18) மற்றும் சிவானி(13) ஆகிய இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவரது சொந்த ஊர் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் அன்னாரது இல்லத்திற்கு நேரில் சென்று தெய்வத்திரு. ராமச்சந்திரன் அவர்களின் குடும்பத்திற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.