சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

கடந்த 02.07.2020 அன்று இரவு ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகளையில் முத்துப்பேச்சி மற்றும் அருண் மகேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பவம் நடந்த 8 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட மூன்று எதிரிகளான முத்துராமலிங்கம் என்ற ராஜா முத்துச்சுடர் மற்றும் அருணாச்சலம் ஆகியோரை கைது செய்வதற்கு புலன் விசாரணை அதிகாரிக்கு உதவிய மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முருகப் பெருமான், செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிலுவை அந்தோணி, தலைமை காவலர்கள் காவல் நிலையம் திரு. லட்சுமணன், திரு. ஜேக்கப் தங்கமோகன், காவலர் திரு. நாராயணசாமி, சாயர்புரம் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. பூர்ணராஜ், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. வேம்புராஜ், திரு. ஆனந்தராஜ், காவலர் திரு. செல்வகுமார் மற்றும் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் சுப்பிரமணி ஆகியோரையும்,

கொரோனா பெருந்தொற்று காலத்தில் களப்பணி ஆற்றிய ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றி திரிந்தவர்களுக்கு கனிவுடன் உணவு பொட்டலங்கள் வழங்கியும், அவர்களுக்கு முக கவசம் வழங்கியும், தேவையான உதவிகளை செய்து பொதுமக்களிடம் பாராட்டை பெற்று அனைவராலும் பேசப்பட்ட முத்தையாபுரம் தலைமைக் காவலரின் செயல் மிகவும் மெச்சத்தகுந்த பணியாகும் ஆகவே அவரை பாராட்டி இன்று(06.07.2020) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டி வெகுமதி வழங்கினார்.