தெற்காசிய விளையாட்டு போட்டி : தமிழக வீரருக்கு தங்கம்

நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹராவில் நடைபெற்றுவரும் 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா,இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அந்தோணி அமல்ராஜ் தங்கப்பதக்கத்தை வென்றார். இந்திய வீரர் அந்தோணி அமல்ராஜ் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போட்டியில் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சுதிர்தா முகர்ஜி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.