ஊரடங்கு உத்தரவை மீறியர்கள் கைது : தூத்துக்குடி

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அத்தியாவசிய தேவைகளைத் தவிர பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடக் கூடாது என போலீசார் எச்சரித்து வருகின்றனர். இருப்பினும் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி திருச்செந்தூர் பிச்சிவிளை மெயின் ரோட்டில் டீக்கடைகளை திறந்து வியாபாரம் செய்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்த  ராஜாமணி நகரைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜெயசீலன் (48) என்பவரை திருச்செந்தூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அந்தோணி சுரேஷ் லிங்கம், மற்றும்

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளைத் தவிர பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடக் கூடாது என போலீசார் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி திருச்செந்தூர் பிச்சிவிளை மெயின் ரோட்டில் டீக்கடைகளை திறந்து வியாபாரம் செய்ததாக பிச்சிவிளையைச் சேர்ந்த  ராஜாமணி நகரைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜெயசீலன் (48) என்பவரை திருச்சந்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி சுரேஷ் லிங்கம், வழக்குப் பதிந்து கைது செய்தார்.  அதேபோல் 144 தடை உத்தரவை மீறி கடை திறந்ததாக பிச்சிவிளை மேற்கு தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன் பிரகாஷ் (34), மணியாட்சி மேற்கு தெருவைச் சேர்ந்த பொன்னையா மகன் பிரம்மு (35) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கு உத்தரவை மீறி ஓட்டப்பிடாரம் மெயின் ரோட்டில் நடமாடியாதாக எப்போதும் வென்றான் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்து முருகன் (30), புதுக்கோட்டை கலாம் நகரைச் சேர்ந்த ஞானராஜ் (59), புதுக்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் மாரிமுத்து (27) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.