தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இணையதளங்கள், சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்கள் பரப்பினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி ஐஜி சங்கர் பேட்டி.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
இணையதளங்களில் தவறான கருத்துக்கள் சோசியல் மீடியாக்கள் சிலபேர் உள்நோக்கத்துடன் பரப்பி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக அது முற்றிலும் தவறு அது விசாரணையை பாதிக்கும்.
சிபிசிஐடி இந்த வழக்கை நேர்மையாகவும் நடுநிலையாகவும் விசாரித்து வருகிறது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறது.
சோசியல் மீடியாக்கள் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை போடக்கூடாது இந்த வழக்கு சம்பந்தமாக என சிபிசிஐடி ஐஜி கூறினார்.
இந்த வழக்கில் 10, 15 தடயங்கள், ஆவணங்கள் விசரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் விசாரிக்கப்படும் என்றார்.