சட்டை இல்லாததால் குரங்கு சட்டை அணிந்து ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தேன் – சமூக ஆா்வலா் சுப்பிரமணி

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகாி ஊராட்சி ஒன்றிய பகுதியில் குரங்கனி என்ற கிராமம் இருக்கிறது. இந்த குரங்கனி என்கின்ற ஊாிலே குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த குரங்களின் தொல்லைகளை போக்குவதற்கு வனத்துறையினருக்கு போன் செய்து உதவி கேட்டோம் வனத்துறையினா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் சமூக ஆா்வலா் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி அவர்கள் செய்தியாளா்களை சந்தித்து மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்களுக்கு நானே 5 ஆம் தேதி பதிவுத் தபால் அனுப்பினேன். அந்த கடிதம் அவருக்கு 6 ஆம் தேதி கிடைத்தது. இருந்தும் நடவடிக்கை எடு்க்க வில்லை, அதற்கு மூன்று நாட்களுக்கு பின்னாளே வனத்துறையினா் வந்தாா்கள் வந்து குரங்கனியில் விசாாித்து விட்டு நாங்கள் வலை எடுத்து வருகிறோம், நீங்கள் வாகனம் ஒன்று ஏற்பாடு செய்து கொடுங்கள் உங்கள் காட்டிற்கு கொண்டு செல்லும் வரை அந்த வாகனச் செலவு உங்களுடையது என்றாா்கள்.

ஒரு கிராமத்தில் வாகனம் ஏற்பாடு செய்து கொடுக்கின்ற வசதிகள் இருக்காது, அப்படி இருக்கின்ற பொழுது வனத்துறையினருக்கு எத்தனையோ வாகனங்கள் இருக்கு அந்த வாகனத்தை வைத்து குரங்கைப் பிடித்து பொது மக்களுக்கு அமைதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் , அதை விடுத்து நீங்கள் வாகனம் கொடுத்தால் நாங்கள் குரங்கைப் பிடிக்கிறோம் என்று சொல்லுகிறாா்கள் அதலால் அது சம்பந்தமாக ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தேன் எனவும் சட்டை இல்லாததால் குரங்கு சட்டை அணிந்து வந்தேன் என்று கூறினாா் ..