சமூக ஆர்வலரின் கொரோனா விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட இராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தொம்மை அந்தோணி, இவர் ஒரு பழைய இரும்பு வியாபாரி ஆவார். இவர் தனது இரு சக்கர வாகனமான டிவிஎஸ் 50-யில் பொருத்தப்பட்ட ஒலி பெருக்கி மூலம் தனது ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதி மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தெரிவித்து வருகிறார். மக்கள் நலன் கருதி காலை மற்றும் மாலை என இரு வேளையிலும் தனது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். நமது Timestamp News மூலம் நம்ம ஊர் சமூக ஆர்வலருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.