தூ.டியில் ரேஷன் அரிசி கடத்தல் : 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் !!!

தூத்துக்குடியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு பறக்கும்படை தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தாசில்தார் நல்லசிவன் தலைமையில் அதிகாரிகள் மில்லர்புரம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த பகுதியில் நின்ற ஒரு வேனில் 17 மூட்டைகளில் மொத்தம் 850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்து, ரேஷன் அரிசி மற்றும் வேனை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். பின்பு வழக்குப்பதிவு செய்து அரிசி கடத்தலில் தொடர்புடைய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.