ரேஷன் கடையில் ஸ்மார்ட் கார்டு சேவை நிறுத்தம்

2017ம் ஆண்டு பிளாஸ்டி ஸ்மார்ட் குடும்ப அட்டை தனியார் மூலம் தயார் செய்து வழங்கப்பட்டது. தற்போது அரசின் இ-சேவை மையத்தில் ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் ஆவதில்லை என கூறி அரசு நிறுத்தியுள்ளது. குடும்ப அட்டை தொலைத்தவர்கள், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் போன்றவற்றை மாற்றம் செய்தவர்கள் புதிய குடும்ப அட்டை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மற்றும்
குடும்ப அட்டை இல்லாதவர்கள் நியாய விலை கடைகளில் குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் ஆதார் கார்டை கொடுத்து அதைத் ஸ்கேன் செய்து சரக்குகளை பெறலாம் , அல்லது பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு கடையில் பொருள் கேட்கும்போது வரும் ஓ.டி.பி. எண்ணை கொண்டு பொருள் வாங்கி கொள்ளலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஆதார் கார்டு அரசின் அஞ்சல் துறை மூலம் பெற்றவர்கள் மட்டும் பொருள்கள் வாங்க முடியும். தனியார் சேவை மையம் மூலம் ஆதார் கார்டு பிரின்ட் எடுத்தவர்களின் ஆதார் கார்டு ரேஷன் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் ஸ்கேன் ஆகாது. மேலும் பதிவு செய்த தொலைபேசி எண் காணாமல் போனாலோ பயன்பாட்டில் இல்லாமல் போனாலோ ஓ.டி.பி. எண் கிடைக்காது. தொடர்ந்து ரேஷன் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரம் இன்டெர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே ஓ.டி.பி. மெசேஜ் கிடைக்கும். இப்படி பிளாஸ்டிக் ஸ்மார்ட் கார்டு தொலைத்தவர்கள் ரேஷன் பொருட்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் இ-சேவை மையத்தில் ஸ்மார்ட் கார்டு நகல் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.