தூத்துக்குடி மாவட்டத்தில் நலிவடைந்த சாக்கு தைக்கும் தொழில்

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா நகர் பகுதில் கிட்டத்தட்ட 40 வருட காலமாக சாக்கு தைக்கும் தொழில் செய்து வரும் ஐயப்பன் தற்போது ஊரடங்கு தடையால் வாழ்வாதாரத்தை இழந்து வருவதால் அரசு உதவ முன்வருமாறு வலியுறுத்தியுள்ளார்.

தற்போது உலகமெங்கும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு தடை விதிக்கப்பட்டிருந்தது, அதன்பிறகு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்வு விடுத்து சில தொழில்களுக்கு அரசு அனுமதி வழங்கியது.

என்னதான் ஊரடங்கு தளர்வு, அரசு தொழிலுக்கு அனுமதி என அரசு அறிவித்தாலும் எங்களின் சாக்கு தைக்கும் தொழில் நலிவடைந்து வருமானமின்றி தவிக்கிறோம். ஒரு நாளைக்கு ரூபாய் 200 முதல் 250 வரை தான் கிடைக்கிறது இதை வைத்து எப்படி குடும்பத்தை காப்பாத்துவது? மேலும் அரசு தொழில் வளர்ச்சிக்கு எங்களின் பசிக்கு உதவுமாறு வருத்தத்துடன் அரசிடம் கேட்கும் சாக்கு தைக்கும் தொழிலாளி