கொரோனா பாதிப்பிலிருந்து 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்: தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று மதியம் 6 பேர் வீடு திரும்பினார்கள்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டிலில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் இன்று மதியம் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார்கள். இன்று டிஸ்சார்ஜ் ஆன நோயாளிகளை மருத்துவத் துறை தலைவர் மற்றும் யோகா நேச்சுரோபதி மருத்துவர் மற்றும் உறைவிட மருத்துவர் முன் நின்று வழி அனுப்பி வைத்தார்கள். தற்போது இன்று மதிய நிலவரப்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 74 பேர் கொரோனா நோய்க்காக சிகிச்சைக்காக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.