தூத்துக்குடியில் வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி ஒற்றை காலில் நூதன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் அடைக்கபட்டுள்ள இந்து திருக்கோவில்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து குமார் தலைமையில் ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் முன்பு சமூக இடைவெளிவிட்டு ஒற்றை காலில் நின்று கோஷங்களை எழுப்பி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ வேம்படி இசக்கியம்மன் கோயில் முன்பு ஒற்றைக் காலில் நின்று போராட்டம்

தூத்துக்குடி மாநகர் இந்து முன்னணி மேற்கு மண்டலம் சார்பில் ஸ்ரீ வேம்படி இசக்கியம்மன் கோயில் முன்பு ஒற்றைக் காலில் நின்று போராட்டம். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேற்கு மண்டலம் தலைவர் L.R.சரவணக்குமார் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மண்டல துணைத் தலைவர் கெங்கன் ராஜ்.