நடிகர் விஜய் பிகில் படத்தை தொடர்ந்து மாநகரம் மற்றும் கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை இன்று மாலை வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இத்திரைப்படத்தில் செகண்ட் போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே மாஸ்டர் படம் தொடர்பான #MasterSecondLook #MasterPongal #MasterHasArrived #Master #Vijay ஆகிய ஹாஸ்டக்குகள் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தது.
இந்த செகண்ட் போஸ்டரில் பள்ளி மாணவர்கள் நடந்து செல்ல அவர்கள் நடுவே விஜய் யாரையோ பார்த்து சைலன்ஸ் என முறைத்து சொல்லும்படி இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.