தினக் கூலி குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய சிலுவைப்பட்டி சிபில் ஐஸ் பிளான்ட்

சிலுவைப்பட்டி சிபில் ஐஸ் பிளான்ட் மற்றும் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் சார்பாக ஐந்தாவது நாள் உதவியை இன்று வழங்கினார்கள்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் தினக் கூலியினர் பலர் தன்னுடைய வருமானத்தை இழந்த நிலையிலும் , தனது உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு வீட்டிற்குள்ளேயே இருந்து வருகின்றனர். இதில் தினக் கூலி குடும்பங்கள் பல தனக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை வாங்க இயலாமல் தனது அன்றாட வாழ்க்கையை இருப்பதைக் கொண்டு நித்தம் கழித்து வருகின்றனர்.

இது போன்ற குடும்பங்களை அந்தந்த பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்களைக் கொண்டு தேர்வு செய்து , உதவி ஆய்வாளர் அவர்கள் தனது சொந்த முயற்சியிலும் , இதில் உதவிட விரும்பும் தனது நண்பர்களின் நிதி உதவியைக் கொண்டும் பாதிக்கப்பட்டுள்ள தினக் கூலியாளர்களுக்கு மசாலா சாமான்கள் , காய்கறி வகைகளை வாங்கி அதை ஒவ்வொரு வீடு வீடாக சென்று நேரில் கொடுத்தும் வருகின்றனர்.

இந்த உதவிக் கரம் கடந்த 02 (மார்ச்) ம் தேதி குடிமை பொருள் உணவு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

02 ம் தேதி தொடங்கிய உதவிக் கரம் இன்றையளவில் ஐந்தாவது நாளை தொட்டுள்ளது. இந்த ஐந்தாவது நாளுக்கான
உதவியில் ஒரு குறிப்பிட்ட நிதி உதவியை தூத்துக்குடி சிலுவைப்பட்டி சிபில் ஐஸ் பிளான்ட் உரிமையாளர் திரு. டொமினிக் அவர்கள் வழங்கினார்கள். இன்றைய நாள் உதவி சுமார் 30 – குடும்பங்களை தேர்வு செய்து கொடுக்கப்பட்ட்ள்ளது. இன்றைய உதவி கீழ அலங்காரத்தட்டு , மேல அலங்காரத்தட்டு , கோயில்பிள்ளை விளை , பாக்கியநாதன் விளை போன்ற பகுதி வாழ் மக்களுக்கும் , மாநகராட்சியில் பணிபுரிகின்ற துப்புரவு பணியாளர்களில் ஒரு சிலருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

உதவியை பெற்ற 30 குடும்பத்தாரும் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் அவர்களுக்கும் , சிபில் ஐஸ் பிளான்ட் உரிமையாளர் திரு. டொமினிக் அவர்களுக்கும் நன்றியை கூறிக் கொண்டனர். ஐந்தாவது நாள் உதவியை 30 குடும்பத்தாரின் வீட்டுக்கு நேரடியாக கொண்டு செல்ல உதவி ஆய்வாளர் அவர்களோடு வழக்கறிஞர் சந்தண செல்வம் அவர்கள் , அரசியல் கடிவாளம் மாத இதழ் மாவட்ட நிருபர் திரு. மெரின் அவர்கள் , இளையவேந்தன் இரத்த தான அறக்கட்டளையின் அமைப்பாளர் சேக்முகமது அவர்கள் உடன் சென்றனர்.