ரோந்து பணியின் போது சாலை விபத்தில் எஸ். ஐ பலி – தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி : மாசார்பட்டி காவல் நிலைய எஸ். ஐ திரு.சிவசுப்ரமணியன் (வயது 34) அவர்கள் 22.02.20 அன்று இரவு 11.00 மணி அளவில் ரோந்து பணியின் போது சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

இவர் 2011 ஆம் ஆண்டு நேரடியாக எஸ்.ஐ பணியில் சேர்ந்து திருச்செந்தூர், தட்டார்மடம் ஆகிய காவல் நிலையங்களில் சிறப்பாக பணிபுரிந்தவர். இவருக்கு மனைவி சுப்புலட்சுமி மற்றும் மகள் சக்திஸ்ரீ ஆகியோர் உள்ளனர்.

அன்னாரது உடல் அவரது சொந்த ஊரான சங்கரன்கோவில் தாலுகா, அத்திப்பட்டியில் 21 குண்டுகள் முழங்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ. கா. ப. பற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சுகுணா சிங் இ.கா.ப அவர்கள் ஆகியோர் தலைமையில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.