கோவிட் -19 ஊரடங்கு காலத்தில் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஷட்டில் கார்க் கிளப் சீல்

தூத்துக்குடி வட்டம், தூத்துக்குடி மாநகராட்சி, ஜார்ஜ் ரோட்டில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஷட்டில் கார்க் கிளப் கோவிட் -19 ஊரடங்கு காலத்தில் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், சார் ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி இன்று 30.07.2020 மாலை 8.00மணிக்கு தூத்துக்குடி வட்டாட்சியர் திரு. செல்வகுமார், தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு
. கிருஷ்ண குமார் ஆகியோர் தலைமையில், உதவி காவல் ஆய்வாளர் திரு. ராஜாமணி தூத்துக்குடி வருவாய் ஆய்வாளர் திரு. சுப்பையா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் திரு. பெரியநாயகம் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப் பட்டது.